Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
பாசிப்பருப்பு வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு பொருத்தமா இருக்கும்..
Idli Sambar Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சாம்பார் செய்யுங்கள். அதுவும் பாசிப்பருப்பைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். இந்த பாசிப்பருப்பு சாம்பார் இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் பொருத்தமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு 10 நிமிடம் போதும். மேலும் இந்த சாம்பார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு இந்த பாசிப்பருப்பு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு சாம்பார் அல்லது இட்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 20-25
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 2 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய
தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 3 கப் தண்ணீரை ஊற்றி கலந்து, குக்கரை அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, மத்து கொண்டு நன்கு கடைந்து
கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை சேர்த்துக்
கொள்ளுங்கள்.
* பின்னர் தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அந்த சாம்பார் குக்கரை அப்படியே அடுப்பில் வைத்து, ஒரு கொதி
விட்டு இறக்கி, நெய் மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
பாசிப்பருப்பு சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications