Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா டக்குனு இந்த போண்டாவை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் ஆசையா சாப்பிடுவாங்க...!
Pasi Paruppu Bonda Recipe in Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் குழந்தைகளின் பசியை போக்க ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், இந்த பாசிப்பருப்பு போண் டாவை செய்து கொடுங்கள்.
இந்த பாசிப்பருப்பு போண்டா, உளுந்து போண்டாவை போன்றே சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் இது கொஞ்சம் கூடுதல் மொறு மொறுப்பாக இருக்கும். இந்த போண்டாவை ஒருமுறை செய்தால், உங்கள் குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

பாசிப்பருப்பில் நிறைய புரோட்டின் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமானதாகும். இந்த ஊட்டச்சத்து தேவையை சுவையான உணவுகள் மூலம் கொடுக்கும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு பாசிப்பருப்பு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- பெரிய வெங்காயம் - 1 1/2
- பச்சைமிளகாய் - 2
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- இஞ்சி - அரை இன்ச்
- மல்லி விதை - 1 டீஸ்பூன்
- வேர்க்கடலை - 2 ஸ்பூன்
- உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
- பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
- பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் மல்லி விதை, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உடைத்த வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உருண்டைகளாக உருட்டி போடவும்.
- இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
- சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு போண்டா தயார்.
- இதையே வெங்காயத்தை நீளமாக நறுக்கி மாவில் போட்டு உருண்டையாக தட்டாமல் எண்ணெயில் உதிர்த்து விட்டு பாசிப்பருப்பு பக்கோடாவாகவும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications