Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ஆந்திரா பப்பு பொடியை இப்படி அரைச்சு பாருங்க... இனிமே ஹோட்டலுக்கே போக மாட்டிங்க... அவ்ளோ சூப்பரா இருக்கும்...!
Paruppu Podi Recipe in Tamil: ஆந்திரா ஹோட்டல்களுக்கு சென்றால் அங்கு முதலில் நமக்கு பரிமாறுவது பருப்புப் பொடிதான். சூடான சாதத்தில் அந்த பருப்புப் பொடியை போட்டு நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடுவதே அலாதி இன்பம்தான். பெரும்பாலான நபர்கள் ஆந்திர மெஸ்களுக்கு செல்வதற்குக் காரணமாகவும் இந்த பருப்புப் பொடியாகத்தான் இருக்கும்.
உங்களுக்கும் இந்த பருப்புப் பொடி மிகவும் பிடிக்குமென்றால், இனி அதை சாப்பிட ஆந்திர ஹோட்டலுக்குத்தான் போக வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டிலேயே அந்த சுவையான பருப்புப் பொடியை தயாரித்து விடலாம். இதை செய்வதற்கான அனைத்து பொருட்களும் நம் வீட்டிலேயே உள்ளது. அதை சரியான அளவில் சேர்த்து அரைத்தால் போதும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 100 கிராம் துவரம் பருப்பு
- 100 கிராம் பாசி பருப்பு
- 100 கிராம் பொட்டுக்கடலை
- 10 வர மிளகாய்
-10 பல் பூண்டு
- 2 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- ஒரு கைப்பிடி கருவேப்பிலை
செய்முறை:
- முதலில் பூண்டின் தோலை உரித்து அதை ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் துவரம் பருப்பை போட்டு அதை நன்கு சிவக்க சுமார் 3 நிமிடம் வறுக்கவும்.
- துவரம் பருப்பு நன்கு சிவந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- அடுத்து அதே கடாயில் பாசி பருப்பை போட்டு அதேபோல நன்கு சிவக்க வறுக்கவும்.
- பாசி பருப்பு நன்கு சிவந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்பு அதே கடாயில் பொட்டுக்கடலையை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அதையும் ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்னர் அதே கடாயில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும். உங்கள் தேவைக்கேற்ப மிளகாயின் எண்ணிக்கையை கூட்டியும், குறைத்தும் கொள்ளலாம்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதையும் ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்னர் அதே கடாயில் சீரகம் மற்றும் பெருங்காய கட்டியை போட்டு சீரகம் நன்கு பொரிந்து வரும் வரை அதை வறுக்கவும்.
- சீரகம் நன்கு பொரிந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பிறகு அதே கடாயில் ஒரு கை அளவு கருவேப்பிலையை போட்டு அது நன்கு மொறு மொறுப்பாக மாறும் வரை அதை வறுக்கவும். பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்பு அந்த கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் தோலை உரித்து வைத்திருக்கும் பூண்டை போட்டு அதை மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.
- பின் அனைத்தும் ஆறியதை உறுதி செய்த பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
- அவ்வளவுதான் ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடி ரெடி. இதை சூடான சாதத்தில் போட்டு நெய் ஊற்றி நாம் அரைத்த பொடியை போட்டு பிசைந்து சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications
