Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
1 கப் கடலைப்பருப்பு இருந்தா இந்த ஸ்பெஷல் போண்டாவை செய்யுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!
Paruppu Masala Bonda Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது காரமாக, சூடாக சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும், அதிலும் இப்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் தினமும் ஏதாவது செய்து தர வேண்டியிருக்கும் குறிப்பாக குழந்தைகள் மாலை நேரத்தில் நிச்சயம் ஏதாவது நொறுக்குத்தீனியை சாப்பிட விரும்புவார்கள். இதுபோன்ற நேரத்தில் சூடாக பஜ்ஜி, போண்டா போன்றவற்றை சாப்பிடத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.
அதிக நேரம் செலவழிக்காமல் மிகவும் எளிதாக, விரைவாக குறிப்பாக சுவையாக செய்யக்கூடிய நொறுக்குத்தீனி ஒன்றை எப்படி செய்வது என்பது பற்றி இப்போது பார்க்கலாம். இந்த பருப்பு மசாலா போண்டா செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் மாலை நேரத்தில் டீ/காபியுடன் சாப்பிடுவதற்கு மிகவும் சூப்பராகவும் இருக்கும். 10 நிமிடத்தில் தயாரிக்கக்கூடிய மொறுமொறுப்பான பருப்பு மசாலா போண்டாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கடலைப்பருப்பு - 200 கிராம்
- பெரிய வெங்காயம் - 2
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- சோம்பு - 2 ஸ்பூன்
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு - 5 பல்
- இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- கறி மசாலா தூள் - அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- சிக்கன் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
- தக்காளி - 1
- கடலை மாவு - 1 ஸ்பூன்
- சோள மாவு - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- வறுக்க எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- 200 கிராம் கடலைப்பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன், சிறிதளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்கவும்.
- பின், அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- மற்றொரு கடாயில், சிறிதளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், அதில் ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய மூன்று பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் நனறாக வதங்கியதும் அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- பின், ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் சோள மாவை 1/2 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கலந்து இதனுடன் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் சிறிதளவு உப்பு, பொறித்து வைத்துள்ள போண்டாவை இதனுடன் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
- சூப்பரான பருப்பு மசாலா போண்டா ரெடி!



Click it and Unblock the Notifications