Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
இட்லி, தோசைக்கு சட்னி செஞ்சு போரடிக்குதா? இந்த பருப்பு தொகையலை செஞ்சு பாருங்க... டேஸ்ட் சூப்பரா இருக்கும்...!
Paruppu Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசைதான் செய்வீர்களா? பொதுவாக இட்லி, தோசை என்றால் அதற்கு சட்னி காரமாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்காக எப்போதும் ஒரே மாதிரியான கார சட்னியை செய்ய முடியாதல்லவா?
பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னிதான் மிகவும் எளிமையான மற்றும் சரியான சைடிஷாகும். கொஞ்சம் நேரம் கூடுதலாக இருக்கும்போது சாம்பார் வைப்போம். ஆனால் இந்த இரண்டுமே இல்லாமல் இட்லி, தோசைக்கு வேறுசில சைடிஷ்களும் உள்ளது.

நீங்கள் இன்று வீட்டில் இட்லி, தோசை செய்யப்போகிறீர்கள் என்றால், அதற்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், துவரம் பருப்பை வைத்து தொகையலை முயற்சி செய்யுங்கள். இந்த பருப்புத் தொகையல் வழக்கமான சட்னி போல இல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த தொகையலுக்காகவே இரண்டு இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்திற்கும் இது அருமையாக இருக்கும். இந்த பதிவில் துவரம் பருப்பு தொகையலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் துவரம் பருப்பு
- அரை கப் துருவிய தேங்காய்
- 3 பல் நறுக்கிய பூண்டு
- 4 வர மிளகாய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி உலர வைக்கவும்.
- ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் துவரம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை சுமார் 3-4 நிமிடங்கள் வறுக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் துருவல் மற்றும் நறுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பின்னர் அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
- பின்னர் சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயத்தைச் சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். முழுமையாக குளிரும் படி ஓரமாக வைக்கவும்.
- போதுமான தண்ணீர் சேர்த்து கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.
- தேவைப்பட்டால் தாளிக்கவும்.
- இது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்திற்கும் சூப்பராக இருக்கும்.
- உங்களுக்கு புளிப்பு சுவை பிடிக்குமென்றால் இதனுடன் சிறிதளவு புளி சேர்த்தும் அரைக்கலாம்.
- உங்களுக்கு கரகரப்பான தொகையால் வேண்டாமென்றால் வறுத்த பருப்பை அரை 1 மணி நேரம் ஊறவைத்து விட்டு அதன்பின் மிக்ஸியில் போட்டு அரைக்கலாம். இதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிட விரும்பினால் தேங்காயை தவிர்த்து விட்டு அரைக்கவும்.



Click it and Unblock the Notifications
