Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
வீட்டிலேயே சுவையான பரோட்டா சால்னா செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பரோட்டா சால்னா ரொம்ப பிடிக்குமா? அதை உங்கள் வீட்டில் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்று செய்து கொடுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பரோட்டா சால்னா ரொம்ப பிடிக்குமா? அதை உங்கள் வீட்டில் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்று செய்து கொடுங்கள். இந்த பரோட்டா சால்னா பரோட்டாவிற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைத்தால், நிச்சயம் இந்த சால்னாவை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு வீட்டிலேயே பரோட்டா சால்னா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரோட்டா சால்னாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 5
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 2 பல்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கல்பாசி - சிறிது
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் , வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் நீரை ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சால்னா நீர் போன்று இருக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ப நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* சால்னாவில் இருந்து பச்சை வாசனை நீங்கி எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பரோட்டா சால்னா தயார்.
குறிப்பு:
* மசாலா பொடிகளை சேர்த்த பின்னர், அவற்றை அடிப்பிடிக்க வைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் சுவையே மாறிவிடும். மசாலா பொடிகளை சேர்த்து சில நொடிகள் வதக்கியதும், அடுத்து சேர்க்க வேண்டிய பொருளை உடனே சேர்த்துவிடுங்கள்.
* இந்த பரோட்டா சால்னாவில் வேண்டுமானால் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
