Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பன்னீர் இருந்தா.. ஒருடைம் இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க.. வேற லெவல் டேஸ்ட்-ல இருக்கும்..
Paneer Pulao Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் வாங்குவீர்களா? எப்போது பன்னீரை வாங்கினாலும் ஒரே சுவையில் தான் செய்து சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் இருப்பவர்கள் பன்னீரை வித்தியாசமாக செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்படியானால் பன்னீர் புலாவ் செய்யுங்கள்.
இந்த பன்னீர் புலாவ்வை எந்த வேளையிலும் செய்து சாப்பிடலாம். அதுவும் பிள்ளைகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த மற்றும் சுவையான லன்ச்பாக்ஸ் ரெசிபியும் கூட. இதுவரை நீங்கள் வீட்டில் புலாவ் செய்தது இல்லை என்றால், இந்த பக்குவத்தில் பன்னீர் கொண்டு புலாவ் செய்யுங்கள். இப்படி செய்யும் போது புலாவ் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பன்னீர் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பட்டாணி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பாஸ்மதி அரிசி - 1 கப் (30 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
நீரை ஊற்றி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக ப்ரை
செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு,
சீரலகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், அதில் பொடியாக நறுக்கிய
கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலாவை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் புதினா மற்றும் கொத்தமல்லியைத் தூவி 2 நிமிடம்
வதக்கி, பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் 2 கப் நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில்
வைத்து, 1 விசில் விட்டு இறக்கினால், சுவையான பன்னீர் புலாவ்
தயார்.



Click it and Unblock the Notifications