Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
1 கப் பனீரும், அரை கப் பாலும் இருந்தா இந்த மாதிரி கிரேவி பண்ணுங்க... சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்..
Paneer Milk Gravy Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அதற்கு புதிதாக எதாவது சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா? புரட்டாசி மாதம் தொடங்கிவிட்ட நிலையில் சப்பாத்தி, பூரிக்கு அசைவம் இல்லாமல் ஒரு ஸ்பெஷலான சைடிஷ் செய்ய நினைத்தால், பனீர் வாங்கி இந்த சூப்பரான சைடிஷ் செய்து பாருங்கள். இந்த சூப்பரான பனீர் மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
இந்த கிரேவியின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் பால்தான். இப்படி பால் சேர்ப்பதால், கிரேவி நன்கு க்ரீமியாகவும், சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு பனீர் பிடிக்குமென்றால் நிச்சயம் இந்த கிரேவியை ஒரு முறையாவது முயற்சித்துப் பாருங்கள். அதன்பின் அடிக்கடி செய்வீர்கள்.

உங்களுக்கு பனீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பனீர் - 200 கிராம்
- வெங்காயம் - 1
- தக்காளி - 2
- பூண்டு பற்கள் - 8
- இஞ்சி - ஒரு துண்டு
- முந்திரிப்பருப்பு - 7
- பட்டை - 2 சிறிய துண்டு
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
- பிரிஞ்சி இலை - 1
- காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
- சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- பால் - 1/2 கப்
- கசூரி மேத்தி - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- கடாயை சூடாக்கி அதில் உலர்ந்த வெந்தயக்கீரையை அதாவது கசூரி மேத்தியை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் கைகளால் லேசாக பொடித்துக் கொள்ளவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பனீரை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளவும்.
- கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி முந்திரி சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும். பிறகு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பிரிஞ்சி இலை சேர்த்து காஷ்மீர் மிளகாய்த்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள் மற்றும் சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து கருக விடாமல் வதக்கவும். பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- சில நிமிடங்கள் மென்மையான தீயில் வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். பின் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- பின் காய்ச்சி ஆறவைத்த பால், பொடித்து வைத்துள்ள வெந்தயக்கீரை இலைகள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டுகளை கிரேவியில் கலந்து 2 நிமிடங்கள் லேசாக கொதித்ததும் இறக்கினால் சூப்பரான பனீர் கிரேவி ரெடி!



Click it and Unblock the Notifications