டயட்ல இருந்தா.. காலையில இந்த பன்னீர் முட்டை இட்லியை செஞ்சு சாப்பிடுங்க.. சுவையானதும், சத்தானதும் கூட..

Posted By:

Paneer Egg Idli Recipe In Tamil: நீங்கள் ஜிம்மிற்கு போகிறீர்களா? ஜிம்மிற்கு செல்பவர்கள் புரோட்டீன் நிறைந்த உணவுகளை காலை வேளையில் அதிகம் உட்கொள்ள வேண்டும். அப்போது வெறும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அந்த முட்டையுடன், பன்னீரையும் சேர்த்து அருமையான சுவையில் இட்லி செய்து சாப்பிடுங்கள்.

இந்த பன்னீர் முட்டை இட்லி பேச்சுலர்களுக்குமான ரெசிபியும் கூட. ஏனெனில் அந்த அளவில் இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இல்லத்தரசிகள், காலையில் வேகமாக சத்தான டிபனை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க நினைத்தால், இந்த பன்னீர் முட்டை இட்லியை செய்யுங்கள். இது நிச்சயம் சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான காலை உணவு ஆகும். வளரும் குழந்தைகளுக்கு இந்த இட்லியை செய்து கொடுத்தால், அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Paneer Egg Idli How To Make a Paneer Egg Idli Recipe

உங்களுக்கு பன்னீர் முட்டை இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் முட்டை இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை - 3
* தேங்காய் துருவல் - 1 கப்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* பன்னீர் - 100 கிராம்
* தண்ணீர் - சிறிது
* முந்திரி - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை 1 கப் சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 100 கிராம் பன்னீரை கைகளால் உதிர்த்து சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
* பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, நீரை சூடேற்ற வேண்டும். அதற்குள் இட்லி தட்டின் குழிகளில் ஒவ்வொரு முந்திரியை வைத்து, பின் கலந்து வைத்துள்ள பன்னீர் முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.
* பின்பு அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான பன்னீர் முட்டை இட்லி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 5, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion