Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
பன்னீரை ஒருடைம் இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு டேஸ்ட் சும்மா அள்ளும்...
Paneer Do Pyaza Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பன்னீர் என்றால் ரொம்ப பிடிக்குமா? எப்போதும் பன்னீரை செய்தால் ஒரே மாதிரி தான் சமைப்பீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் பன்னீர் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் தோ ப்யாசாவை செய்யுங்கள்.
இந்த பன்னீர் ரெசிபி க்ரீமியாகவும், சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். இந்த பன்னீர் ரெசிபி சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் தோ ப்யாசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் தோ ப்யாசா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ப்ரை செய்வதற்கு...
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
தயிர் கலவைக்கு...
* தயிர் - 1/2 கப்
* மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வீட்டிலேயே பிரஷ் க்ரீம் செய்வதற்கு..
* பன்னீர் - 5-6 துண்டுகள்
* காய்ச்சிய பால் - 1/2 கப்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* ஏலக்காய் - 1
* பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 2 பிரியாணி இலை, 1 ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்கி
மூடி வைத்து மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அத்துடன் மல்லித் தூள்,
மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து
நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் சேர்த்து, 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர்
துண்டுகளை சேர்த்து ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பச்சை மிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள்
தூள் ஒருமுறை கிளறி, பின் வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி
லேசாக வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து வதக்க வேண்டும்
* அடுத்து அதில் கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து கிளறி, கிரேவிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி
வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். அதற்குள் மிக்சர்
ஜாரில் பன்னீர் துண்டுகள், 1/4 கப் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து
நன்கு அரைத்தால், மில்க் க்ரீம் தயார்.
* கிரேவி நன்கு கொதித்ததும், அதில் ப்ரை செய்த பன்னீர் மற்றும்
வெங்காயத்தை சேர்த்து, பின் மில்க் க்ரீமையும் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக கசூரி மெத்தி மற்றும் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, நன்கு
கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான பன்னீர் தோ ப்யாசா
தயார்.
Image Courtesy: Cook Click N Devour!!!



Click it and Unblock the Notifications
