Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
பன்னீர் செட்டிநாடு
உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு பிரபலமான ஒரு செட்டிநாடு டிஷ் செய்யுங்கள். அது தான் பன்னீர் செட்டிநாடு. இந்த பன்னீர் செட்டிநாடு சப்பாத்திக்கு மட்டுமின்றி பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு பிரபலமான ஒரு செட்டிநாடு டிஷ் செய்யுங்கள். அது தான் பன்னீர் செட்டிநாடு. இந்த பன்னீர் செட்டிநாடு சப்பாத்திக்கு மட்டுமின்றி பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் செட்டிநாடு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் செட்டிநாடு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 300 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 5-6
* மல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1
* மிளகு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சிறிது ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, அதை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பன்னீர் செட்டிநாடு தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications