Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
பன்னீர் சீஸ் சாண்ட்விச்
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாண்ட்விச் பிடிக்குமா? அப்படியானால் உங்கள் வீட்டில் பிரட், சீஸ் மற்றும் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சாண்ட்விச் செய்து சாப்பிடுங்கள்.
மாலை வேளையில் பசிக்கும் போது, அந்த பசியை ஆற்றும்படியான ஸ்நாக்ஸ் ஒன்றை செய்து சாப்பிட வேண்டுமா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாண்ட்விச் பிடிக்குமா? அப்படியானால் உங்கள் வீட்டில் பிரட், சீஸ் மற்றும் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சாண்ட்விச் செய்து சாப்பிடுங்கள். இந்த சாண்ட்விச் பெரியோர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் சீஸ் சாண்ட்விச் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் சீஸ் சாண்ட்விச்சின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 3 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 1 கப் (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய சீஸ் - தேவையான அளவு
* பிரட் துண்டுகள் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பாதி வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் கெட்சப் சேர்த்து கிளற வேண்டும்.
* அடுத்து அதில் பன்னீரை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு பிரட் துண்டை எடுத்து, அதில் வதக்கிய பன்னீரைப் பரப்பி, அதன் மேலே சிறிது வெங்காயத்தைத் தூவி, அதன் மேல் துருவிய சீஸைத் தூவ வேண்டும்.
* அதன்பின் மேலே மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பிரட் துண்டுகளை முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்து, இரண்டு துண்டுகளாக வெட்டினால், சுவையான சீஸ் பன்னீர் சாண்ட்விச் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications