Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ்ஷை ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்ய சொல்லி கேப்பாங்க...
Paneer Burji Masala Recipe In Tamil: இரவு சப்பாத்தி தான் உங்கள் வீட்டில் டின்னரா? அந்த சப்பாத்திக்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு வழக்கமாக செய்யக்கூடியவாறு கிரேவியை செய்யாமல், ஒருமுறை பன்னீர் புர்ஜி மசாலாவை செய்யுங்கள்.
இந்த பன்னீர் புர்ஜி மசாலா சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் புர்ஜி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் புர்ஜி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பன்னீர்- 200 கிராம் (துருவியது)
* கசூரி மெத்தி - சிறிது
* புதினா - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து பச்சை வாசனை போய் தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி 10 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவி வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறி, மிதமான
தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி சேர்த்து, அத்துடன்
பொடியாக நறுக்கிய புதினா இலைகளைத் தூவி கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி மசாலா தயார்.



Click it and Unblock the Notifications