Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பன்னீர் புர்ஜி சாண்ட்விச்
உங்கள் வீட்டில் உள்ளோர் சாண்ட்விச்சை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒரு சுவையான சாண்ட்விச் செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் பன்னீர் புர்ஜி சாண்ட்விச் செய்யுங்கள்.
காலை வேளையில் என்ன சமைப்பதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சாண்ட்விச்சை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒரு சுவையான சாண்ட்விச் செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ருசியான பன்னீர் புர்ஜி சாண்ட்விச் செய்யுங்கள். இந்த சாண்ட்விச்சிற்கு முதலில் பன்னீர் புர்ஜி செய்யுங்கள். அதன் பின் பிரட் டோஸ்ட் செய்து, அதன் நடுவே பன்னீர் புர்ஜியை வைத்து, அதன் பின் வெங்காயம், தக்காளியை வைத்து அலங்கரித்து, மேலே மற்றொரு பிரட் டோஸ்ட் வைக்க வேண்டும். இந்த பன்னீர் புர்ஜி சாண்ட்விச் செய்வது மிகவும் சுலபம் மற்றும் சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் புர்ஜி சாண்ட்விச் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈஸியான முறையில் பன்னீர் புர்ஜி சாண்ட்விச் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4 துண்டுகள்
* வெண்ணெய்/நெய் - 2 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சுள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (வட்டமாக நறுக்கியது)
* தக்காளி - 1 (வட்டமாக நறுக்கியது)
* பன்னீர் - 1/4 கப் (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பின் பிரட் துண்டுகளில் முன்னும் பின்னும் நெய் அல்லது வெண்ணெயை தடவி, பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின் அதில் துருவிய பன்னீர், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்பு அந்த பன்னீர் மசாலாவை டோஸ்ட் செய்த பிரட் துண்டின் மீது வைத்து, அதன் மேல் வெங்காயம் மற்றும் தக்காளியை வைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி, அதன் மீது மற்றொரு டோஸ்ட் செய்த பிரட் துண்டை வைக்க வேண்டும். இப்போது சுவையான பன்னீர் புர்ஜி சாண்ட்விச் தயார்.
Image Courtesy



Click it and Unblock the Notifications