Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
சீசன் முடியுறதுகுள்ள பலாக்கொட்டையும், கத்திரிக்காயும் வெச்சு ஒருடைம் இந்த கிரேவியை ட்ரை பண்ணுங்க..
Palakottai Kathirikkai Gravy Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு அட்டகாசமான சுவையில் ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? தற்போது பலாப்பழ சீசன் என்பதால், அந்த பலாக்கொட்டையைக் கொண்டு கத்திரிக்காயுடன் சேர்த்து கிரேவி செய்யுங்கள்.
இந்த பலாக்கொட்டை கத்திரிக்காய் கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அருமையாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு பலாக்கொட்டை கத்திரிக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாக்கொட்டை கத்திரிக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)
* பலாக்கொட்டை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 3 டம்ளர்
* பூண்டு - 1 கைப்பிடி (நன்கு தட்டிக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும்
உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய் மற்றும் பலாக்கொட்டையை
சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 3 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம்
காய்கறிகளை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத்
திறந்து கிளறி விட வேண்டும். இல்லாவிட்டால் அடிபிடித்துவிடும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் தட்டி வைத்துள்ள பூண்டு
பற்களை சேர்த்து நன்கு கிளறி விட்டு, 5 நிமிடம் மூடி வைத்து மிதமான
தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் ஆனதும் மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான பலாக்கொட்டை கத்திரிக்காய் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications
