Latest Updates
-
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன?
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க
Palak Pulao Recipe in Tamil: வழக்கமான பிரியாணி மற்றும் தக்காளி சாதம் சாப்பிட்டு போரடித்து விட்டதா? ஆம் எனில் இந்த புதிய சத்தான பாலக் புலாவை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான புலாவ் போலவோ அல்லது வெஜ் பிரியாணி போலவோ இது நிச்சயம் இருக்காது. அதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் பொருட்களும், இது சமைக்கப்படும் முறையும்தான். இந்த பாலக் புலாவ் நார்த் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாகும்.

உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு காரம் குறைவான அதேசமயம் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு உணவை நீங்கள் செய்து கொடுக்க விரும்பினால் இது அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். உங்கள் குழந்தைகள் கீரை சாப்பிட மாட்டார்கள் என்றால் இதுபோல செய்து கொடுங்கள். கீரை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சுவையான புலாவை செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமும் அல்ல.
உங்களுக்கு சத்தான பாலக் புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
புலாவ் செய்ய:
- 2 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 1 கேரட், நறுக்கியது
- 1 உருளைக்கிழங்கு, நறுக்கியது
- ½ குடைமிளகாய், நறுக்கியது
- 3 ஸ்பூன் பட்டாணி
- 2 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- 1 கப் பாஸ்மதி அரிசி, 20 நிமிடங்கள் ஊறவைத்தது
- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
பாலக் விழுது செய்ய:
- 1 கட்டு பாலக்
- 4 பூண்டு பல்
- 2 இன்ச் இஞ்சி
- 3 பச்சை மிளகாய்
செய்முறை:
- முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், ஒரு கட்டு பாலக கீரையைச் சேர்த்து அதில் முழுமையாக மூழ்கும் படி செய்யவும்.
- கீரை நன்கு வேகும் வரை கொதிக்க விடவும். பிறகு கீரையை வடிகட்டி, அதன் நிறம் மாறாமல் இருக்க குளிர்ந்த நீரில் அலசவும்.
- பசலைக்கீரையிலிருந்து நீரை நன்கு பிழிந்துவிட்டு, அதை மிக்ஸி ஜாரில் போடவும்.
- அத்துடன் 4 பல் பூண்டு, 2 இன்ச் இஞ்சி மற்றும் 3 பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் மென்மையான விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பெரிய கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும். அதில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்பு 1 நறுக்கிய வெங்காயம் சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும்.
- அதன் பிறகு 1 கேரட், 1 உருளைக்கிழங்கு, ½ குடைமிளகாய், மற்றும் 3 ஸ்பூன் பட்டாணி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- காய்கறிகள் மொறுமொறுப்பான பதம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் தயார் செய்து வைத்துள்ள பாலக் விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் 2 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் ½ டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, கலவை நன்கு கொதிக்கும் நிலைக்கு வரும் வரை சூடாக்கவும்.
- தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், 20 நிமிடங்கள் ஊறவைத்த 1 கப் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
- மேலும், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.
- அரிசி நன்கு வெந்ததும், அதை மெதுவாகக் கிளறிவிடவும் 10 நிமிடம் தம் போட்டு திறந்தால் அட்டகாசமான பாலக் புலாவ் ரெடி!
- இதை குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்தனுப்பினால் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications