Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
பாலக் சன்னா தால்
பாலக் கீரையில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இத்தகைய கீரையை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சமைத்தால், இந்த கீரை சமையல் அட்டகாசமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சமையல் தான் பாலக் சன்னா தால்
கீரைகளை வாரத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரையை வாய்க்கு ருசியான வகையில் சமைத்து சேர்த்து வந்தால், அதை விட ருசியான உணவு வேறெதுவும் இருக்க முடியாது. பாலக் கீரையில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இத்தகைய கீரையை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சமைத்தால், இந்த கீரை சமையல் அட்டகாசமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சமையல் தான் பாலக் சன்னா தால்.

கீழே பாலக் சன்னா தால் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: முருங்கைக்கீரை கூட்டு
தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு/சன்னா தால் - 1 கப்
* பாலக் கீரை - 200 கிராம்
* தண்ணீர் - 3 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளித்து வதக்குவதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
* பின் ஊற வைத்த கடலைப்பருப்பை குக்கரில் போட்டு, அதில் 3 கப் நீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் பாலக் கீரை, சிறிது நீர் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து குக்கரை மூடி1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் உடனே விசிலை எடுத்து விட்டு, குக்கரைத் திறக்க வேண்டும். இதனால் கீரையில் நிறமானது தக்க வைக்கப்படும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு தாளிக்கவும். சீரகம் வெடிக்க ஆரம்பிக்கும் போது, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
* பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* பிறகு தக்காளி சேர்த்து, உப்பு தூவி தக்காளியை நன்கு மென்மையாக வதக்கவும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஏற்கனவே கீரையை வேக வைக்கும் போது உப்பு சேர்த்துள்ளதை நினைவில் கொண்டு, அதற்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
* மசாலா பொடிகள் அனைத்து வெங்காயம் தக்காளியுடன் நன்கு ஒருசேரும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் பாலக் கீரையை ஊற்றி கிளறி, 4-5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பாலக் சன்னா தால் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications