Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் பச்சரிசி வெச்சு.. ஈவ்னிங் ஒருடைம் இந்த ஸ்நாக்ஸ் செய்யுங்க.. டேஸ்ட் டக்கரா இருக்கும்...
Pacharisi Appam Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பசிக்கிறது என்று கூறினால், அவர்களுக்கு பஜ்ஜி, போண்டா என்று எண்ணெயில் பொரித்து கொடுப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள பச்சரிசி கொண்டு வித்தியாசமான சுவையைக் கொண்ட ஒரு அப்பம் செய்து கொடுங்கள்.
இந்த அப்பம் கேரளாவில் மிகவும் பிரபலமானது. முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பச்சரிசி அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சரிசி அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* வெல்லம் -1 கப்
* தண்ணீர் - 1 கப் + 1/4 கப்
* ஏலக்காய் - 2
* உப்பு - 1 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - பொடியாக நறுக்கியது
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் நீரை
ஊற்றி குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சரிசியை
போட்டு, அத்துடன் 2 ஏலக்காய் சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 1 சிட்டிகை உப்பு, 1 சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, நீரை ஊற்றி,
வெல்லத்தை கரைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* பின் கரைத்த வெல்ல நீரை நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் போதே,
மாவுடன் வடிகட்டி ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் தேங்காய்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காய்
துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதை மாவுடன் சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு ஆப்ப கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தேங்காய்
எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி
ஊற்றி, மூடி வைத்து, 4 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப்
போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான பச்சரிசி அப்பம்
தயார்.



Click it and Unblock the Notifications