Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
பச்சை மிளகாய் தொக்கு ரெசிபி... பச்சை மிளகாயை வைச்சு இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் இந்த தொக்கு செய்யுங்க...
பச்சை மிளகாய் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது காரம் தான். ஆனால் இதில் அளவற்ற ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. இதில் இருக்கும் பீட்டோ-கரோட்டின் இதயத்தை வலுப்படுத்துவதோடு, கெட்ட கொழுப்பை குறைத்து ஹார்ட் அட்டாக்கில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி, இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வளவு நன்மைகள் கொண்ட பச்சை மிளகாயை நாம் உறுகாய், குழம்பு, மற்றும் பொரியல் என அனைத்திலும் சேர்த்திருப்போம். ஆனால், பச்சை மிளகாய் குழம்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், பொள்ளாச்சியில் பிரபலமாக இருக்கும் இந்த பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் - 15
- சின்ன வெங்காயம் - 10-12
- இஞ்சி - 2 இன்ச் அளவு
- புளி - எலுமிச்சை அளவு
- மஞ்சள் - ½ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- வெல்லம் - சிறிதளவு
செய்முறை:
- பச்சை மிளகாயை நன்றாக கழுவி காம்புகளை நீக்கி நன்றாக உலர
விடவும்.
- பின் மிளகாய்களை நீளவாக்கில் நடுவில் மட்டும் கிரீ தனியாக வைத்துக்
கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி
கொள்ளவும்.
- இஞ்சி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து கரைத்து
எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து பொரிய
விடவும்.
- பின் எண்ணெய்யில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமாகும் வறுக்கவும்.
- பின் அதனுடன் கீரி வைத்த பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்கவும்.
- அதில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் கருவேப்பிலை சேர்த்து சத்தம் அடங்கும் வரை விடவும்.
- பின் அதில் பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை
வதக்கவும்.
- மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக கிளறவும்.
- பின் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து கலந்து விடவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க
விடவும்.
- கடைசியாக சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லம் இல்லை
என்றால் நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்து
கொள்ளலாம்.
- கொஞ்சம் கெட்டிப்பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இப்போது
கார சாரமான பச்சை மிளகாய் குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
