Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
பச்சை பயறு கடையல்
வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு பயறை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் பச்சை பயறைக் கொண்டு கடையல் செய்தால், அது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும்.
புரோட்டீன் அதிகம் நிறைந்தது தான் பச்சை பயறு. உணவில் பச்சை பயறை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு பயறை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் பச்சை பயறைக் கொண்டு கடையல் செய்தால், அது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு கடையல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* நாட்டு தக்காளி - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகு - 1/2 டீஸ்பூன்
மசாலா பொடிகள்...
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறைப் போட்டு குறைவான தீயில் குறைந்தது 3-5 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் நீரை ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, மத்து கொண்டு பச்சை பயறை நன்கு மசிக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பச்சை பயறு கடையல் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications