Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
1/2 கப் ரவையும், 1/4 கப் மைதாவும் இருந்தா.. இந்த மாதிரி வெங்காய ரவா தோசை செய்யுங்க.. ருசியா இருக்கும்...
Onion Rava Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் காலையில் தோசை கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம். வீட்டில் ரவை, அரிசி மாவு மற்றும் மைதா இருந்தால் போதும், அட்டகாசமான சுவையில் ரவா தோசையை சுடலாம்.
அதுவும் வெங்காயம் இருந்தால், அந்த வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி ரவா தோசையின் மேல் தூவினால், சுவையான வெங்காய ரவா தோசை ரெடி. இந்த ரவா தோசைக்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வெங்காய ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய ரவா தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1/2 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* மைதா - 1/4 கப்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, அரிசி மாவு, சீரகம்,
மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை
சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதுவும் இந்த மாவானது நன்கு நீர் போன்று இருக்க வேண்டும். அப்படி
இருந்தால் தான், மாவு நன்கு மெல்லியதாக இருக்கும்.
* பின்னர் நாண்ஸ்டிக் தோசை கல்லை அடுப்பில் வைத்து, நன்கு சூடேற்ற
வேண்டும். கல் நன்கு சூடானதும், சிறிது எண்ணெய் தெளித்து, கலந்து
வைத்துள்ள மாவைக் கொண்டு முதலில் ஒரு வட்டமிட்டு, அதன் பின் நடுவே
மாவை ஊற்ற வேண்டும். முக்கியமாக தோசையை தடிமனாக ஊற்ற வேண்டாம்.
* அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி, அதன்
மேல் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து, தோசையை
பொன்னிறமாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* உயர் தீயில் வைத்து தோசையை சுடாதீர்கள். இல்லாவிட்டால் தோசை
மொறுமொறுவென்று வராது. குறைவான தீயில் வைத்தால் தான் தோசை
மொறுமொறுவென்று வரும். அதன் பின் தோசையை திருப்பி போடாமல் அப்படியே
மடித்து எடுக்க வேண்டும். ரவா தோசை சுடும் போது பொறுமையைக்
கடைப்பிடிக்க வேண்டும். பொறுமையைக் கடைப்பித்தால் தான் தோசை நன்கு
மொறுமொறுப்பாக வரும். இதேப் போல் மீதமுள்ள மாவையும் தோசைகளாக சுட
வேண்டும். இப்போது சுவையான வெங்காய ரவா தோசை தயார்.
குறிப்பு:
* ரவா தோசைக்கு மாவு மிகவும் நீராக இருக்க வேண்டும். ஒருமுறை தோசை
சுட்டபின், மாவு கெட்டியாகத் தொடங்கும். எனவே அடுத்த தோசை சுடும்
போது, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். நீராக
இல்லாவிட்டால் தோசை மொறுமொறுப்பாக வராது. வேண்டுமானால் இந்த மாவை 1/2
மணிநேரம் ஊற வைத்து, பின்னர் சுடலாம்.
* எப்போதும் ரவையும், அரிசி மாவையும் சமஅளவில் எடுத்து, அதற்கு பாதி
அளவில் மைதா மாவை சேர்க்க வேண்டும்.
* ரவா தோசைக்கு நெய் சேர்த்தால், ஹோட்டலில் கொடுப்பது போன்ற சுவையைப்
பெறலாம்.
* ரவா தோசையை எப்போதும் திருப்பிப் போடக்கூடாது. மேலும் எப்போதும்
குறைவான தீயில் வைத்து தான் வேக வைக்க வேண்டும்.
* ஒருவேளை தோசை மொறுமொறுவென்று வராவிட்டால், நீரை அதிகம் ஊற்ற
வேண்டும் மற்றும் தோசைக் கல்லானது மிகவும் சூடாக இருக்க வேண்டும்.
* ரவா தோசைக்கு எப்போதும் நாண்ஸ்டிக் கல்லை பயன்படுத்தினால் தான்,
நன்கு மொறுமொறுவென்று வரும்.
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications
