Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த குழம்பை செய்யுங்க...
Onion Mor Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் என்ன சமைப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? நீண்ட நேரம் சமையலறையில் இருக்க விரும்பவில்லையா? நீண்ட நேரம் சமையலறையில் இல்லாமல் டக்கென்று ஒரு குழம்பு செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் கெட்டி தயிர் உள்ளதா?
அப்படியானால் அந்த தயிரையும், வெங்காயத்தையும் கொண்டு ஒரு அருமையான சுவையில் மோர் குழம்பு அல்லது மோர் தாளிப்பு செய்யுங்கள். இது சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இதற்கு எந்த பொரியலும் தேவையில்லை. குறிப்பாக இது காரம் அதிகம் இல்லாமல் இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு வெங்காய மோர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 2 இன்ச்
* கெட்டி தயிர் - 100 கிராம்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 2 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - பாதி (நீளவாக்கில் வெட்டியது)
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் புளிக்காத கெட்டித் தயிரை எடுத்துக் கொண்டு,
சிறிது நீரை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த பச்சை மிளகாய் விழுது, சிறிது உப்பு சேர்த்து
கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் 2 வரமிளகாயை உடைத்து சேர்த்து, பூண்டு பற்களைத் தட்டிப்
போட்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், சிறிது உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, அடுப்பில்
அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து நன்கு கிளறி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெங்காய மோர் குழம்பு தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications