Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
3 வெங்காயமும், தயிரும் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி ஒரு சைடு டிஷ் செய்யுங்க.. ருசி நாக்குலயே நிக்கும்...
Vengaya Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் அதிக பொருட்களைப் பயன்படுத்தாமலும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் வீட்டில் வெங்காயமும், தயிரும் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சைடு டிஷ் செய்யுங்கள். இந்த வெங்காய கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காய கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (சற்று பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 50 மிலி
* தண்ணீர் - 1/4 கப்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி,
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் தயிரை நன்கு அடித்து ஊற்றி கிளறி, வதக்கி வைத்துள்ள
வெங்காயத்தை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க
வைத்து, கசூரி மெத்தியை கசக்கி தூவி இறக்கினால், சுவையான வெங்காய கறி
தயார்.



Click it and Unblock the Notifications
