Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
அடுத்தமுறை கொத்தமல்லி சட்னியை இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Onion Coriander Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு இன்று என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி சற்று அதிகம் இருந்தால், அதைக் கொண்டு கொத்தமல்லி சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியே வதக்கி, பின் அரைத்துப் பாருங்கள். சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு வெங்காய கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்ப இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* இஞ்சி - 2 இன்ச்
* கொத்தமல்லி - 1/4 கட்டு
* பெரிய வெங்காயம் - 2
* தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாயை காம்புடன் சேர்த்து, உப்பி வரும் அளவில்
வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் இஞ்சியை துண்டுகளாக்கி
சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கி, அதையும் தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து லேசாக சுருங்க ஆரம்பிக்கும் போது
பிரட் எடுத்து அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் முதலில் வரமிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன்
சேர்த்து கிளறினால், சுவையான வெங்காய கொத்தமல்லி சட்னி தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications
