Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
Omelette Chops Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒவ்வொரு நாளும் என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? இன்று சப்பாத்திக்கு முட்டை சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று முட்டை ரெசிபியை செய்யாமல், ஒருமுறை ஆம்லெட் சாப்ஸ் செய்யுங்கள். இந்த ஆம்லெட் சாப்ஸ் சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். அதுவும் ஒருமுறை இந்த சுவையில் முட்டை சைடு டிஷ் செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.

இந்த ஆம்லெட் சாப்ஸ் குறித்து ரேகா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு ஆம்லெட் சாப்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆம்லெட் சாப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + தேவையான அளவு
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 7-8 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* பெரிய வெங்காயம் - 2
* பெரிய தக்காளி - 2
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* முட்டை - 6
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், சோம்வு ஆகியவற்றை சேர்த்து நன்கு
வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதை இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு
மென்மையாக அரைக்க வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் 6 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் அடித்து வைத்துள்ள
முட்டை கலவையை ஊற்றி, மேலே சிறிது மிளகுத் தூளை தூவி, எண்ணெய் ஊற்றி,
முன்னும் பின்னும் லேசாக, கலக்கி அளவில் வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அந்த ஆம்லெட்டை கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறிது சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி,
மூடி வைத்து பச்சை வாசனை போக நன்கு வேக வைக்க வேண்டும்.
* மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கியதும், அதில்
துண்டுகளாக்கி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளை சேர்த்து கிளறி, 2 நிமிடம்
வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மற்றும்
காரசாரமான ஆம்லெட் சப்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications