Latest Updates
-
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்!
சுவையான.. சத்தான... ஆனியன் ஓட்ஸ் தோசை - எப்படி செய்றது-ன்னு பாருங்க...
Oats Onion Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட வீட்டில் மாவு இல்லையா? உங்கள் வீட்டில் ஓட்ஸ் உள்ளதா? அப்படியானால் அந்த ஓட்ஸ் கொண்டு வெங்காய தோசையை சுடுங்கள். இந்த ஓட்ஸ் தோசை டக்கென்று 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும்.
மேலும் இது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த ஓட்ஸ் தோசை டயட்டில் இருப்போருக்கு ஏற்ற காலை உணவு. ஓட்ஸில் டயட்டரி நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், ஃபிட்டாக இருக்க நினைப்பவர்களுக்கு இந்த தோசை சிறந்த தேர்வாக இருக்கும்.

உங்களுக்கு ஆனியன் ஓட்ஸ் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய ஓட்ஸ் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் - 1 கப்
* வெள்ளை ரவை - 1/2 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப் + 1 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் ஓட்ஸை
சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து மிக்சர்
ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த ஓட்ஸ் பொடியுடன், 1/2 கப் ரவை, 1/2
கப் அரிசி மாவு, புளித்த தயிர் மற்றும் 2 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி
நன்கு கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் பொடியாக நறுக்கிய
வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்க்க
வேண்டும்.
* பின் அதில் சீரகம், பெருஙங்காளத் தூள், கொத்தமல்லி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, மீண்டும் 1 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை அள்ளி கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக
வைத்து எடுத்தால், சுவையான வெங்காய ஓட்ஸ் தோசை தயார்.



Click it and Unblock the Notifications
