நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்

Posted By:

North Karnataka Style Coconut Chutney Recipe in Tamil: இட்லி, தோசை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேங்காய் சட்னிதான். எப்போதும் தேங்காய் சட்னியை ஒரே மாதிரிதான் சாப்பிட்டு போரடித்து விட்டதா? தேங்காய் சட்னியையே வித்தியாசமான சுவையில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அடுத்தமுறை தேங்காய் சட்னியை செய்வதாக இருந்தால், நார்த் கர்நாடகா ஸ்டைலில் தேங்காய் சட்னியை செய்யுங்கள். இந்த தேங்காய் சட்னி வழக்கமான தேங்காய் சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக தனித்துவமான சுவையில் இருக்கும்.

North Karnataka Style Coconut Chutney Recipe How to Make at Home in Tamil

இதில் சேர்க்கப்படும் பொருட்களும் வழக்கமான தேங்காய் சட்னிகளிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். உங்களுக்கு நார்த் கர்நாடகா ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நார்த் கர்நாடகா ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- துருவிய தேங்காய் - 1/2 கப்
- பொட்டுக்கடலை - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 5
- புளி - சிறிய துண்டு
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- பூண்டுப் பற்கள் - 2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- புதினா இலைகள் - 10
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- வர மிளகாய் - 1

செய்முறை:

- ஒரு மிக்ஸி ஜாரில், துருவிய தேங்காய் மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்துக் கொள்ளவும்.

-அதன்பின் கொத்தமல்லி தவிர பிற பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்.

- பின்னர் தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

- பின்னர் சற்று கெட்டியாக மற்றும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

- இறுதியில் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

- ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் வர மிளகாய் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி கிளறினால் சுவையான நார்த் கர்நாடகா ஸ்டைல் தேங்காய் சட்னி ரெடி!

- இதை சூடான இட்லி, தோசை அல்லது உப்புமாவுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 25, 2026, 22:12 [IST]
Desktop Bottom Promotion