Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
நூக்கலை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. சத்தானதும் கூட..
Nookal Poriyal Recipe In Tamil: நிறைய பேர் மார்கெட்டில் நூக்கல் காயை பார்த்திருப்பார்கள். ஆனால் அதை வாங்கமாட்டார்கள். ஏனெனில் அந்த காயை எப்படி சமைப்பது என்று தெரியாது. சிலர் நூக்கல் காயைக் கொண்டு வெறும் சாம்பார் மட்டும் தான் செய்வார்கள்.
ஆனால் நூக்கலைக் கொண்டு பொரியலும் செய்யலாம். இந்த காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அதிகமாக உள்ளன. வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், மிகவும் நல்லது.

உங்களுக்கு நூக்கல் பொரியலை எப்படி செய்வதென்று தெரந்து கொள்ள வேண்டுமா? கீழே நூக்கல் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நூக்கல் - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் நூக்கல்லின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறிய சதுரத்
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும்
உப்பு சேர்த்து நன்கு கிளறி, காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி,
அடுப்பில் வைத்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* காய் வெந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், துருவிய
தேங்காய் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்து
வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* இறுதியாக வேக வைத்துள்ள நூக்கல்லை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி
விட்டு இறக்கினால், சத்தான நூக்கல் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications