Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கபாப் முர்க் ரெசிபி
சிக்கன் பிரியர்களுக்கு நிச்சயம் கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே இந்த வாரம் சற்று வித்தியாசமான சுவை கொண்ட கபாப் ரெசிபியை வீட்டில் முயற்சித்துப் பாருங்கள். இது மிகவும் எளிமையான சிக்கன் ரெசிபி. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
இதற்கு கபாப் முர்க் என்று பெயர். இங்கு அந்த ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் நெஞ்சுக்கறி - 2 (சிறுதுண்டுகளாக்கப்பட்டது)
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பௌலில் சிக்கன், எலுமிச்சை சாறு, உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து பிரட்டி, 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெண்ணெயை உருக்கி ஒரு பௌலில் ஊற்றி, அதில் குங்குமப்பூ மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து க்ரில் கம்பியில் சிக்கன், குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, பின் அதன் மேல் குங்குமப்பூ வெண்ணெயை தடவி, க்ரில் மிஷினில் வைத்து வேக வைத்து எடுத்து, அதன் மேல் எலுமிச்சை சாற்றினை ஊற்றி பரிமாறினால், சூப்பரான கபாப் முர்க் ரெடி!!!



Click it and Unblock the Notifications
