Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
திருநெல்வேலி ஸ்டைல்: சிக்கன் குழம்பு
திருநெல்வேலி என்றால் அல்வா மட்டும் பிரபலமல்ல, சிக்கன் குழம்பும் தான். அதிலும் இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பானது மசாலா அரைத்து செய்யப்படுவதாகும். இதனால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பு வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
சரி, இப்போது அந்த திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
துருவிய தேங்காய் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 10-12
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3-4
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 டீஸ்ழுன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, பின் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு நாண்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் சோம்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
அடுத்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, மிதமான தீயில் தண்ணீர் சேர்க்காமல் 5-10 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.
இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
