Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! தவா சிக்கன்

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் - 1 (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை சுமார் 3-4 நிமிடம் கிளற வேண்டும்.
இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும்.
ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும். பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும். இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும்.
இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
