Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மும்பை ஸ்டைல் முட்டை புர்ஜி (வீடியோ)
முட்டை புர்ஜி என்னும் முட்டை பொரியலை பலவாறு செய்து சாப்பிடலாம். அந்த வகையில் அவற்றில் ஒரு ஸ்டைலான மும்பை ஸ்டைலில முட்டை புர்ஜியை எப்படி செய்வதென்று பார்க்க போகிறோம். இந்த முட்டை புர்ஜியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் சேர்க்கப்படும் பாவ் பாஜி மசாலா தான்.
இந்த மசாலாவானது பொதுவான வட இந்தியாவில் பெரும்பாலான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும். மேலும் இந்த மசாலா மிகுந்த சுவையுடன் இருப்பதால், இதனை உணவுகளில் சேர்த்தால், அது உணவின் சுவையை இன்னும் அதிகரிக்கும். இங்கு அந்த மும்பை ஸ்டைல் முட்டை புர்ஜியின் செய்முறை மற்றும் அதன் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
முட்டை - 4
வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பாவ் பாஜி மசாலா - 1 + 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து 2-3 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து தக்காளியை சேர்த்து மிதமான தீயில் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
அதற்குள் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பாவ் பாஜி மசாலா சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் உடைத்த முட்டையை வாணலியில் ஊற்றி, நன்கு 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
முட்டை புர்ஜியானது ரெடியான சமயத்தில் இறுதியில் மீதமுள்ள பாவ் பாஜி மசாலாவைத் தூவி, வெண்ணெயை உருக்கி சேர்த்து, மேலே கொத்தமல்லியைத் தூவினால் முட்டை புர்ஜி ரெடி!!!
<center><iframe width="100%" height="315" src="//www.youtube.com/embed/gfMbzfwm_ME" frameborder="0" allowfullscreen></iframe></center>



Click it and Unblock the Notifications
