Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
காரமான பெங்காலி மீன் குழம்பு
பெங்காலியில் செய்யப்படும் மீன் குழம்பை 'மச்சல் ஜால்' என்று சொல்வார்கள். இது பெங்காலியில் மிகவும் பிரபலமான ஒரு மீன் குழம்பு. இந்த ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் முதலில் மீனை பொரித்து பின் குழம்பு வைப்பது தான்.
இங்கு அந்த பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பான மச்சல் ஜால் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப் பார்த்து முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
மீன் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எணணெய் ஊற்றி காய்ந்ததும், மீனை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் பிரியாணி இலை, ஓமம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு அத்துடன் தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள மீனை இதில் சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
