Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
சப்பாத்தி ரோல்
மாலையில் குழந்தைகளுக்கு குட்டி டிபன் போன்று ஏதாவது செய்து தர நினைத்தால், சப்பாத்தி ரோல் செய்து கொடுங்கள். ஏனெனில் இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபி என்பதால், மாலையில் விளையாடிவிட்டு சோர்ந்து போய் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் உடலில் எனர்ஜியானது அதிகரிக்கும். மேலும் இதை காலை உணவாகவும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
இங்கு சப்பாத்தி ரோல் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
முட்டை - 2
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அடுத்து மஞ்சள் தூள், மிளகாள் தூள், சாம்பார் பொடி, உப்பு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கி விட வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது தேய்த்து சூடேற்ற வேண்டும்.
பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒவ்வொரு சப்பாத்தியையும் தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சூடேற்ற வேண்டும். அப்படி சூடேற்றும் போது, இரண்டு பக்கமும் அடித்து வைத்துள்ள முட்டையை சப்பாத்தியின் மீது ஊற்றி தேய்த்து, முன்னும் பின்னும் வேக வைத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த சப்பாத்திகளில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து ரோல் செய்தால், சப்பாத்தி ரோல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
