Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
வித்தியாசமான சுவையுடைய 20 ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
ரம்ஜான் பண்டிகை வரப்போகிறது. அனைவரும் நல்ல கமகமக்கும் பிரியாணிக்கு காத்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் ரம்ஜான் என்றாலே பிரியாணி தான் ஸ்பெஷல். ஆனால், எப்போதும் ரம்ஜான் அன்று வெறும் பிரியாணியை மட்டும் செய்து சாப்பிடாமல், அப்போது சற்று வித்தியாசமான பல மட்டன் மற்றும் சிக்கன் ரெசிபிக்களை முயற்சி செய்தால் என்ன...?
இஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம்!!!
என்ன புரியவில்லையா? ஆம், எப்போதும் பிரியாணியை மட்டும் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக ஏதேனும் குழம்பு, குருமா, மசாலா என்று செய்வோம். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான குழம்பு, குருமா மற்றும் மசாலா ரெசிபிக்களை செய்யாமல், அவற்றை வேறு எந்த ஸ்டைலில் எல்லாம் செய்யலாம் என்று தெரிந்து, அவற்றை முயற்சி செய்தால், அந்த வித்தியாசமான ரெசிபியின் சுவையால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் பாராட்டையும் பெறலாம்.
வேறு சில ஸ்பெஷல் ரெசிபிக்கள்!
அந்த வித்தியாசமான ஸ்டைல் ரெசிபிக்களை எங்கு போய் தேடுவது என்று யோசிக்கிறீர்களா? அதற்காகத் தான் தமிழ் போல்ட் ஸ்கை, வித்தியாசமான ஸ்டைலில், வித்தியாசமான சுவையுடைய சில மட்டன் மற்றும் சிக்கன் ரெசிபிக்களை செய்முறையுடன் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, ரம்ஜான் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

கீமா சப்பாத்தி
காலையில் வித்தியாசமான சுவையில் ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், கீமா சப்பாத்தியை மேற்கொள்ளலாம்.

மட்டன் பிரியாணி
ரம்ஜான் அன்று எளிமையான முறையிலும், வித்தியாசமான சுவையிலும் ஒரு பிரியாணி செய்ய வேண்டுமெனில், அதற்கு இந்த மட்டன் பிரியாணி சரியானதாக இருக்கும். ஏனெனில் இதன் செய்முறை மிகவும் எளிமையானது.

சாம்ப் மசாலா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்த வேண்டுமென்று ஆசைப்பட்டால், மட்டன் கொண்டு செய்யப்படும் சாம்ப் மசாலாவை முயற்சி செய்யலாம்.

எள்ளு சிக்கன் குழம்பு
அசைவ உணவாளர்களுக்கு எள்ளு சிக்கன் குழம்பு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். மேலும் இதன் செய்முறையும் மிகவும் எளிதானது. பேச்சுலர்கள் கூட, இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம்.

ஆந்திரா ஸ்டைல்: மட்டன் குழம்பு
ஆந்திரா ஸ்டைல் உணவுகள் என்றாலே கண்களில் இருந்து தண்ணீர் வரும் அளவு காரமானது இருக்கும். ஆனால் அதற்கேற்றாற் போல் ஆந்திரா ஸ்டைல் உணவுகளின் சுவைக்கு நிகர் எதுவும் இருக்காது. அதிலும் மட்டன் குழம்பின் சுவைக்கு அளவே இல்லை.

சிக்கன் ஜல்ப்ரேசி ரெசிபி
என்ன தான் பாகிஸ்தான் எதிரி நாடாக இருந்தாலும், அங்கு சமைக்கப்படும் சிக்கன் ஜல்ப்ரேசி என்னும் சிக்கன் ரெசிபி மிகவும் சூப்பராக இருக்கும்.

ஷாஹி மட்டன் குருமா
மட்டன் குருமா என்றால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் இந்த மட்டன் குருமாவில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மிகவும் பிரபலமான ஷாஹி மட்டன் குருமா. இது பண்டிகையின் போது செய்து சாப்பிடக்கூடிய ஒரு சிறப்பான ரெசிபியாகும்.

குடைமிளகாய் கீமா
ரம்ஜானுக்கு பிரியாணியை மட்டும் செய்யாமல், அப்போது அத்துடன் சைடு டிஷ்ஷாக குடைமிளகாய் கீமாவை செய்தால், அதன் சுவையே தனிதான்.

வெள்ளரிக்காய் சிக்கன் ரெசிபி
ரம்ஜானுக்கு ஏதேனும் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய ஆசையா? அப்படியெனில் வெள்ளரிக்காய் சிக்கன் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.

சிக்கன் கேஃப்ரியல்
சிக்கன் கேஃப்ரியல் ஒரு கோவா ரெசிபி. இது மிகுந்த சுவையுடைய ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபி. மேலும் குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அருமையான ரெசிபி.

சேலம் மட்டன் குழம்பு
மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். அவற்றில் ஒன்று தான் சேலம் மட்டன் குழம்பு. இது நன்கு சுவையோடு சமைக்கும் போது வீடே கமகமக்கும் வகையில் இருக்கும்.

சைனீஸ் முந்திரி சிக்கன் ரெசிபி
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சிக்கன் ரெசிபி மிகவும் பிடிக்கும் என்றால், இந்த சைனீஸ் முந்திரி சிக்கன் ரெசிபி சிறந்ததாக இருக்கும். இது ஒரு ஸ்பெஷலான ஒரு சிக்கன் ரெசிபி மட்டுமின்றி, இது ரம்ஜான் அன்று எளிமையாக செய்யக்கூடியதும் ஆகும்.

சிக்கன் ஆப்கானி
ரம்ஜான் அன்று ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இந்த சிக்கன் குழம்பிற்கு, சிக்கன் ஆப்கானி என்று பெயர். இதனை விருந்தினருக்கு செய்து கொடுத்தால், நல்ல பாராட்டைப் பெறலாம்.

ஆந்திரா ஸ்டைல்: சிக்கன் 65 ரெசிபி
சிக்கன் 65 ரெசிபியை தென்னிந்தியாவில் பலவாறு சமைப்பார்கள். அவற்றில் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி மிகவும் காரமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். அதிலும் சிக்கன் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

சிக்கன் நிஹாரி
லக்னோவில் மிகவும் பிரபலமான சிக்கன் குழம்பு தான் சிக்கன் நிஹாரி. பொதுவாக நிஹாரியானது மட்டன் அல்லது மாட்டுக்கறியை வைத்து தான் செய்வார்கள். இது ஒரு வித்தியாசமான ஒரு சிக்கன் குழம்பு. மேலும் இது பண்டிகையன்று செய்வதற்கு ஏற்றது.

தேங்காய் மட்டன் குழம்பு
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும், தேங்காயை அரைத்து செய்யப்படும் மட்டன் குழம்பின் சுவைக்கு ஈடு இணை இருக்க முடியுமா? ஏனெனில் அது சாதாரணமாக இருந்தால், மிகுதியான சுவையுடையது.

சிக்கன் பூனா
சிக்கன் பூனா வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு. இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். ஆகவே சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு, இது ஒரு சிறந்த ரெசிபி.

மட்டன் ரோகன் ஜோஷ்
மட்டன் ரோகன் ஜோஷ் ஒரு காஷ்மீரி ஸ்டைல் உணவுகளில் மிகவும் பிரபலமானது. இந்த ரெசிபி காஷ்மீரி அசைவ உணவுகளிலேயே மிகவும் சுவையானது. இதுவும் ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபியாக செய்வதற்கு ஏற்ற ஒரு சிக்கன் ரெசிபியாகும்.

நீலகிரி சிக்கன் குருமா
எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அவ்வாறு ஒரே மாதிரியை செய்து சாப்பிடுவதை விட்டு, நீலகிரி ஸ்டைல் சிக்கன் குருமாவை ட்ரை செய்யலாம். இது நல்ல காரசாரமிக்க சிக்கன் ரெசிபியாகும்.

கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
கேரளாவில் மீன் உணவு மட்டும் தான் சுவையானதாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அங்கு சமைக்கப்படும் மட்டம் குருமாவும் மிகவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications