Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
10 வகையான சிக்கன் மசாலா ரெசிபிக்கள்!!!
அசைவ உணவுகளின் ருசியைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவு அதன் ருசியானது மறக்க முடியாத வகையில் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளில் அனைவராலும் அதிகம் விரும்பி சாப்பிடுவது என்னவென்று பார்த்தால், அது சிக்கன் தான். ஏனெனில் பெரும்பாலான கடைகளில் சிக்கன் தான் அதிக வெரைட்டியில் இருக்கும். எனவே தான் பலரது மனதில் பிடித்த அசைவ உணவு என்று கேட்டால், அது சிக்கனாக உள்ளது.
சிலருக்கு சிக்கனில் 65 தான் பிடிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு தான். ஆனால் அவ்வாறு சிக்கனை எண்ணெயில் போட்டு பொரித்தால், அதனால் உடலுக்கு கேடு தான் விளையும். ஆனால் அந்த சிக்கனை எண்ணெயில் பொரிக்காமல், வேக வைத்து சாப்பிட்டால், சிக்கனில் உள்ள அனைத்து நன்மைகளையும் பெறலாம். எனவே சிக்கனை பொரிக்காமல், பல வகைகளில் மசாலா, குழம்பு என்று சுவையான முறையில் சமைத்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அதிலும் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிட வேண்டும். எனவே தான், அத்தகைய சிக்கனை வைத்து எப்படியெல்லாம் மசாலா மற்றும் குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் என்று 10 வகையான சிக்கன் மசாலாக்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, உங்களுக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

சிக்கன் மசாலா
எளிதான முறையில் சிக்கனை குழம்பு அல்லது மசாலா செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், இந்த சிக்கன் மசாலா சரியானதாக இருக்கும். இந்த மசாலாவை செய்வதற்கு கஷ்டப்பட தேவையில்லை. எளிதில் செய்துவிடலாம்.

சிக்கன் குருமா
சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டிஸ் மிகவும் காரசாரமாக இருக்கும். சிக்கன் பிடிக்காதவர்கள் கூட இந்த ரெசிபியை விரும்பு சாப்பிடும் வகையில், இது ஆளை இழுக்கும்.

மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி
கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. குழந்தைகளும் வயதானவர்களும் கூட இதனை சாப்பிடலாம். சுவையானதும் சத்தானதும் கூட. எனவே இதை ட்ரை செய்து பாருங்களேன்.

தக்காளி சிக்கன் கிரேவி
சிக்கன் நன்கு புளிப்புடனும், வித்தியாசமான சுவையுடனும் இருக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு தக்காளி சிக்கன் கிரேவி சிறந்ததாக இருக்கும். இந்த முறையில் தக்காளி அதிகம் தேவைப்படும்.

நாட்டுக் கோழி குழம்பு
நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெஷல் குழம்பிலேயே தெரிந்துவிடும். அதிலும் நாட்டுக் கோழி உடலுக்கு மிகவும் சத்தானது. அதே சமயம், இதனை குழம்பு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

சிக்கன் ஹலீம்
சிக்கன் ஹலீம் ஹைதராபாத்தில் நோன்பு நேரத்தில் செய்யப்படும் ஒருவித சுவையான டிஷ். இந்த ரெசிபியை வீட்டிலேயே சுவையான ருசியில் சமைக்க முடியும்.

தவா சிக்கன்
தவா சிக்கன் என்றால் வேறு ஒன்றும் இல்லை. சிக்கனை தவாவில் செய்து சாப்பிடுவது தான். பொதுவாக இந்த ரெசிபியை ரெஸ்ட்டாரண்ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அதை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்.

கோரி ரொட்டி கிரேவி
தென்னிந்திய உணவுகளில் மங்லோரியன் ரெசிபி மிகவும் பிரபலமானது. அதிலும் அசைவ உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். அந்த மங்லோரியன் ஸ்டைலில் செய்யப்படும் சிக்கனில், கோரி ரொட்டி கிரேவி அருமையாக இருக்கும்.

சிக்கன் மொகலாய்
சிக்கன் வாங்கினால் பொதுவாக வறுவல், ப்ரை, சிக்கன் 65 என்று தான் வித்தியாசமாக செய்வோம். இப்போது அதை விட முற்றிலும் வித்தியாசமாக வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க விரும்பினால், அதற்கு சிக்கன் மொகலாய் சரியாக இருக்கும்.

கடாய் சிக்கன்
குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் எலும்பு இல்லாமல் சிக்கனை சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கடாயில் செய்யப்படும் சிக்கன் சத்துக்களை அப்படியே தக்க வைத்திருக்கும்.



Click it and Unblock the Notifications











