Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
No Oil Noi Boil Idli and Chutney Recipe in Tamil: இன்று நாடு முழுவதும் மக்களைப் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மாறியுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் பல ஹோட்டல்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வீட்டில் சமைப்பதே பெரும் பிரச்சினையாக மாறலாம்.
இந்த நிலையில் அடுப்பும், எரிவாயுவும் தேவைப்படாத சில உணவுகளை முயற்சிப்பது உங்கள் கேஸ் சிலிண்டர் பிரச்சினையை ஓரளவிற்கு குறைக்கும், அதிலும் நீங்கள் அடுப்பில்லாமல் சமைக்கும் உணவு ஆரோக்கியமாகவும் இருந்தால் அது கூடுதல் போனஸ்தான். பொதுவாக இட்லி அனைவருக்கும் பிடித்த உணவு, ஆனால் அதை அடுப்பில்லாமல் சமைக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? உண்மைதான், இட்லியை நீங்கள் அடுப்பே இல்லாமல் சமைக்கலாம். ஆனால் இது வழக்கமான இட்லி போல இருக்காது. மேலும் இந்த சூப்பரான இட்லிக்கு அடுப்பே தேவைப்படாத சூப்பரான சட்னியையும் செய்யலாம், அதையும் இந்த எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு அடுப்பே இல்லாத எண்ணெய் தேவைப்படாத இட்லியும், சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே No Boil No Oil இட்லி,சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இட்லி செய்ய:
- அவல் - 1 கப்
- தேங்காய் பால் - 1 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
சட்னி அரைக்க:
- தேங்காய் - கால் கப்
- சின்ன வெங்காயம் - 20
- வர மிளகாய் - 4
- தக்காளி - 1
- வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- இட்லியை செய்வதற்கு முதலில் அவலை நன்கு சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் திக்கான ஒரு கப் தேங்காய்பால் மற்றும் ஒரு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- மாவு மிகவும் கெட்டியாக இருந்தாலும் மேலும் அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து மாவை பிசையவும்.
- இந்த இட்லி மாவு வழக்கமான இட்லி மாவு போல தண்ணீர் பதத்தில் இருக்கக்கூடாது. எனவே கொஞ்சம் கெட்டியாகவே மாவை பிசைந்து வைத்துகொள்ளவும்.
- பின்னர் இதை இட்லி பானையில் இட்லி ஊற்றுவது போல மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் வைக்கவும்.
- இதை ஒரு மூடி போட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- கொஞ்ச நேரத்தில் இது நன்கு இறுகி மிருதுவான இட்லியாக மாறிவிடும்.
- முதலில் தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- பின் சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், வெங்காயம், வர மிளகாய், நறுக்கிய தக்காளி மற்றும் வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அதேசமயம் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
- அவ்வளவுதான் அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான இட்லியும், சுவையான சட்னியும் ரெடி!



Click it and Unblock the Notifications
