Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
தேங்காய் இல்லாமலேயே தேங்காய் சட்னியை செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
No Coconut Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன டிபன் செய்வதென்று யோசித்து செய்வதே பெரிய சவாலாக உள்ளதா? எப்போதும் உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசை தான் செய்வீர்களா? அதற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி செய்து போரத்துவிட்டதா?
சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தேங்காய் சேர்க்காமல் செய்யக்கூடிய தேங்காய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருப்பதோடு, வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் இல்லாமலேயே தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் இல்லாமலேயே செய்யக்கூடிய தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில், வதக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்,
பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்கி இறக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த பேஸ்ட் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி
கலந்தால், சட்னி தயார்.
Image Courtesy: cookerypark



Click it and Unblock the Notifications
