Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
புத்தாண்டு ஸ்பெஷலா சிக்கனை இந்த மாதிரி ரோஸ்ட் செஞ்சு சாப்பிடுங்க.. அல்டிமேட்டா இருக்கும்...
New Year Special Verkadalai Chicken Roast Recipe In Tamil: புத்தாண்டு ஸ்பெஷலாக பலரது வீடுகளில் அசைவ உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இந்த புத்தாண்டிற்கு நீங்கள் ஸ்பெஷலாக ஒரு சிக்கன் ரெசிபியை செய்ய நினைத்தால், வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட்டை செய்யுங்கள்.
இந்த வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட் சாதத்துக்கு நல்ல சைடு டிஷ்ஷாக இருப்பது மட்டுமின்றி, வெறுமனே சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* வேர்க்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 2
* சிக்கன் - 1/2 கிலோ
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையைப்
போட்டு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து 1 நிமிடம் வறுத்து
இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிக்கனை கழுவி சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு வேக
வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் மிளகாய்
தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் தயிரை ஊற்றி கிளறி, 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, 15 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கிளறி விட்டு, நீர் ஓரளவு
வற்றி ரோஸ்ட்டாகும் வரை வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட் தயார்.



Click it and Unblock the Notifications











