Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
இட்லி, தோசைக்கு இந்த சட்னியை அடிக்கடி அரைச்சு சாப்பிடுங்க... எடையும் குறையும், முடியும் வேகமா வளரும்...!
Nellikai Chutney Recipe in Tamil: நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் நமக்கு உணவு மூலம் மட்டுமே கிடைக்கிறது. எனவே நாம் சாப்பிடும் உணவுகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? எப்போதும் ஒரே சட்னியை செய்து கொடுப்பதால், வீட்டில் உள்ளவர்கள் சரியாக சாப்பிடுவதில்லையா? அப்படியானால் புதுவகையான அதேசமயம் ஆரோக்கியமான சட்னி செய்ய விரும்புகிறீர்களா?

அப்படியானால் இந்த நெல்லிக்காய் சட்னியை முயற்சி செய்து பாருங்கள். நெல்லிக்காய் சட்னி என்பது ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான சட்னியாகும், இது இட்லி அல்லது தோசைக்கு சிறந்த சைடிஷாக இருக்கும். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சட்னி சூடான சாதத்தில் போட்டு ஒரு துளி நெய்யுடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த சட்னியை தொடர்ந்து சாப்பிடுவது எடையைக் குறைப்பதோடு முடி மற்றும் சருமம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
உங்களுக்கு சுவையான நெல்லிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லிக்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 2 பெரிய நெல்லிக்காய்
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 3 பச்சை மிளகாய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 1 ஸ்பூன் வெல்லம்
- 1/2 ஸ்பூன் உப்பு
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- கால் ஸ்பூன் கடுகு
- கால் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பில்லை
செய்முறை:
- நெல்லிக்காய் சட்னி அரைப்பதற்கு முதலில் அதிலுள்ள விதையை நீக்க வேண்டும். விதையோடு சட்னியை அரைத்தால் சட்னி மிகவும் கசப்பாக இருக்கும். எனவே விதையை நீக்கி விட்டு சட்னியை அரைக்கவும்.
- விதையை நீக்கி விட்டு நெல்லிக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை பெருங்காயம், உப்பு, வெல்லம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து முதலில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் கால் கப் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த சட்னி கொஞ்சம் கெட்டியாக இருந்தால்தான் சுவை நன்றாக இருக்கும்.
- சட்னியை அரைத்தவுடன் அதை கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
- கூடுதல் சுவைக்கு கொஞ்சம் வறுத்த நிலக்கடலை அல்லது பொட்டுக்கடலை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும் .
- கடுகு பொரிந்ததும் அதில் உளுந்தம் பருப்பு, 1 வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- உளுந்தம் பருப்பு நிறம் மாறியதும் அதை சட்னியின் மீது கொட்டி நன்கு கிளறினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான நெல்லிக்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications