Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கேரள பெண்களின் நீளமான முடியின் முக்கிய ரகசியம் நெல்லிக்காயை வைத்து செய்யும் இதுதான்... ட்ரை பண்ணி பாருங்க...!
Nellikai Chammanthi Recipe: ஒரு ஆப்பிள்க்கு சமம் ஒரு நெல்லிக்காய் என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம். நெல்லிக்காய் ஆப்பிளை விடவும் விலை ரொம்ப குறைவுதான். ஆனால் அதன் புளிப்பு கலந்த கசப்பு சுவையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இது பிடிக்காது. ஆனால் இது வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ-யின் சிறந்த ஆதாரமாக விளங்குவதோடு சிறப்பான ஆக்ஸிசனேற்றிகளாகவும் இருக்கின்றன.
நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சரும ஆரோக்கித்தை மேம்படுத்தவும், செரிமான திறனை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மேலும் இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளர்ச்சியடையவும் வலுவடையவும் செய்கிறது. இது தான் கேரளா பொண்ணுங்களோட முடி ஆரோக்கியத்தின் முக்கிய ரகசியமாகவும் இருக்கிறது. சரிஅவங்க ரகசிய ரெசிபியான நெல்லிக்காய் சம்மந்தி எப்படி செய்யறதுன்னு இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பெரிய நெல்லிக்காய் அல்லது சின்ன நெல்லிக்காய் - 8 அல்லது 20
- மாங்காய் - ½ அளவு
- தேங்காய் - ½ மூடி
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - ஒரு இன்ச் அளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
- சின்ன வெங்காயம் - 5
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- நெல்லிக்காயை நன்றாக கழுவி மஞ்சள் மற்றும் உப்பு கலந்த நீரில்
கழுவி சுத்தமான ஈரம் போக துடைத்து எடுக்கவும்.
- பெரிய நெல்லிக்காய் என்றால் சிறிய துண்டுகளாக நறுக்கி விதைகளை
நீக்கி கொள்ளுங்கள்.
- சிறிய நெல்லிக்காய் என்றால் உரலில் இடித்து விதைகளை நீக்கி தனியாக
வைத்து கொள்ளவும்.
- மாங்காயையும் நன்றாக உப்பு மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக அலசி
கொள்ளவும்.
- அதில் பாதி மாங்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி தனியே
வைக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்து
கொள்ளவும்.
- இஞ்சியின் மேல் தோலில் இருக்கும் மண் போக நன்றாக கழுவி தோல் நீக்கி
துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகள் மற்றும்
இஞ்சி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைக்கவும்.
- பின் அதனுடன் நறுக்கிய மாங்காய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு
மீண்டும் அரைக்கவும்.
- பின் அதே மிக்ஸி ஜாரில் உரித்த சின்ன வெங்காயம், மற்றும் துருவிய
தேங்காயை சேர்க்கவும்.
- அதனுடன் பச்சை மிளகாயை உடைத்து சேர்க்கவும்.
- பின் அதில் கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து
தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- கடைசியாக உப்பு பார்த்து தேவை என்றால் சேர்த்து மீண்டும் அரைத்து
எடுத்தால் சுவையான நெல்லிக்காய் சம்மந்தி ரெடி!



Click it and Unblock the Notifications