Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
நெல்லை ஸ்டைல் பூண்டு புளிக்குழம்பை இப்படி செய்யுங்க... சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தம் மாதிரி இருக்கும்...!
Nellai Puli Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் ஒரு நாள் நெல்லை ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். குறிப்பாக திருநெல்வேலி ஸ்டைல் பூண்டு கார குழம்பை முயற்சி செய்து பாருங்கள். திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டுமல்ல சுவையான உணவுகளுக்கும் பெயர் பெற்றது.
இந்த பூண்டு கார குழம்பு செய்வது மிகவும் எளிதானது, ஏனெனில் பூண்டு என்பது அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருளாகும். இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. தனியாக மசாலா அரைத்து பூண்டுடன் சேர்த்து செய்யப்படும் இந்த நெல்லை ஸ்டைல் பூண்டு கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு நெல்லை ஸ்டைல் பூண்டு புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லை ஸ்டைல் பூண்டு புளிக்குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- தனியா - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
- வரமிளகாய் - 6
- மிளகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5
- கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- பூண்டு - 20 பல்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, ஒன்றரை கப் தண்ணீர் பயன்படுத்தி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பூண்டுப் பற்களைத் தோலுரித்து, ஒரு டம்ளரின் அடிப்பாகத்தைப் பயன்படுத்தி லேசாக நசுக்கி வைத்துக் கொள்ளவும். இதையும் தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- வறுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையான விழுதாக அரைக்கவும்.
- பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, மீண்டும் அரைத்து மிகவும் மென்மையான விழுதாகத் தயாரிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். கடுகு வெடித்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து, நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும்.
- இறுதியாக ஒன்றரை கப் புளிக்கரைசல், மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா விழுதைச் சேர்க்கவும். இதை 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
- நன்கு கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். இந்த குழம்பு வத்தக்குழம்பு போல மிகவும் கெட்டியாக இல்லாமல், சற்று நீர்த்த தன்மையுடன் இருக்கும். நீங்கள் விரும்பினால், இன்னும் சிறிது நேரம் கொதிக்க வைத்து கெட்டியாக்கிக்கொள்ளலாம்.
- அவ்வளவுதான் அடுப்பை அணைத்து பாத்திரத்திற்கு மாற்றவும். சூடான சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
