Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
நாவூற வைக்கும்... நெய்மீன் கருவாடு தொக்கு
கருவாட்டை தொக்கு செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். கருவாட்டில் பல வகைகள் உள்ளன. அதில் நெய்மீன் கருவாடு சூப்பராக இருக்கும்.
கருவாடு பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. இதன் மணம் வேண்டுமானால் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் கருவாட்டை தொக்கு செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். கருவாட்டில் பல வகைகள் உள்ளன. அதில் நெய்மீன் கருவாடு சூப்பராக இருக்கும்.

இப்போது அந்த நெய்மீன் கருவாடு கொண்டு எப்படி தொக்கு செய்வதென்பதைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: சுவையான... மட்டன் கைமா கிரேவி
தேவையான பொருட்கள்:
* நெய்மீன் கருவாடு - 2 துண்டு
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* பூண்டு - 1/8 கப் (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.
* பிறகு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதே சமயம் மறுபுறம் கருவாட்டை கழுவி, வெதுவெதுப்பான நீரில் கருவாடை போட்டு, பத்து நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிடவும்.
* பின் வாணலியில் கழுவிய கருவாடை போட்டு, அதில் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அதில் கருவாடு மூழ்கும் வரை நீரை ஊற்ற வேண்டும்.
* பின்பு நன்கு கிளறவிட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து மூடியைத் திறந்து, கருவாடு வெந்துள்ளதா என்பதை கரண்டியால் அழுத்தி பார்க்க வேண்டும். கருவாடு மென்மையாக இருந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.
* இப்போது கருவாட்டில் உள்ள நடுமுள்ளை நீக்கிவிட்டு, மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு வற்றிவிட்டால், சுவையான நெய்மீன் கருவாடு தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications