Latest Updates
-
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்.. -
வெயில் மற்றும் மழையால் வீட்டில் புழுக்கமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்.. -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் வீட்டில் பணமும் ஆரோக்கியமும் குறையாமல் இருக்கணுமா? இந்த 5 வாஸ்து ரகசியங்களை உடனே பின்பற்றுங்க! -
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்.. -
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சுவையான... மட்டன் கைமா கிரேவி
இந்த வாரம் நீங்கள் சற்று ருசியான ஒரு ரெசிபியை வீட்டில் செய்ய நினைத்தால், மட்டன் கைமா கிரேவி செய்யுங்கள். இது இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்.
விடுமுறை வந்தாலே பலரும் அதை அசைவ உணவுகளை வீட்டில் வாங்கி பிடித்தவாறு சமைத்து சாப்பிட்டு கொண்டாடுவோம். இந்த வாரம் நீங்கள் சற்று ருசியான ஒரு ரெசிபியை வீட்டில் செய்ய நினைத்தால், மட்டன் கைமா கிரேவி செய்யுங்கள். இது இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். அதோடு இது பேச்சுலர்கள் செய்யும் அளவில் எளிமையான செய்முறையைக் கொண்டதும் கூட.

உங்களுக்கு மட்டன் கைமா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையை படித்து முயற்சி செய்யுங்கள். அதோடு உங்கள் அனுபவத்தையும் எங்களுடன் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் கைமா - 300 கிராம்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (நறுக்கியது)
* அரிசி கழுவிய தண்ணீர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 2
* கறிவேப்பிலை - சிறிது
* பிரியாணி இலை - 1
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மட்டன் கைமாவை நீரில் 2 முறை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, மீண்டும் 2 முறை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கவும்.
* பிறகு மட்டன் கைமாவை சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதில் அரிசி கழுவிய நீர் மற்றும் சாதாரண நீரை ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு இறக்கவும்.
* அதற்குள் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* விசிலானது போனதும், குக்கரைத் திறந்து, அதில் அரைத்த தேங்காய் சேர்த்து, கிரேவிக்குத் தேவையான அளவு நீரை ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து 0 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், மட்டன் கைமா கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications