Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
நவராத்திரி ஸ்பெஷல் மொச்சை சுண்டல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Navratri Special Mochai Sundal Recipe In Tamil: நவராத்திரிக்கு உங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளீர்களா? மாலை வேளையில் என்ன பிரசாதம் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மொச்சை உள்ளதா? அப்படியானால் அந்த மொச்சையைக் கொண்டு சுண்டல் செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்யும் மொச்சை சுண்டலை செய்யாமல், ஒருமுறை தனியாக ஒரு மசாலாவை அரைத்து அதை சேர்த்து செய்யுங்கள். இப்படி செய்யும் போது, அந்த சுண்டலின் சுவை மிகவும் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி மொச்சை சுண்டல் செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மொச்சை சுண்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மொச்சை சுண்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்ந்த மொச்சை - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை சேர்த்து
2-3 நிமிடம் நன்கு வறுத்து இறக்க வேண்டும்.
* பின் வறுத்த மொச்சையை நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ள வேண்டும். அதன்
பின் அதில் நன்கு கொதிக்க வைத்த சூடான நீரை ஊற்றி, மூடி வைத்து 4
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் மொச்சை நீருடன் அப்படியே ஊற்றி, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி, 4-5
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடிகட்டிவிட்டு, மொச்சையை
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து
நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கட்டி பெருங்காயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு
பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த மொச்சையை சேர்த்து, அத்துடன் அரைத்த பொடியை
சேர்த்து, துருவிய தேங்காயை தூவி நன்கு 1 நிமிடம் கிளறி விட்டு
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மொச்சை சுண்டல் தயார்.



Click it and Unblock the Notifications











