Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
நாட்டுக்கோழி சூப்
சளி பிடித்திருக்கும் போது, ஒரு கப் நாட்டுக்கோழி சூப் குடித்தால், சளியில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலுக்கு தெம்பாகவும் இருக்கும். உங்களுக்கு நாட்டுக்கோழி சூப் பிடிக்குமா?
சூப் உடலுக்கு மிகவும் நல்லது. பொதுவாக சூப்பானது ஒரு நாளின் எந்நேரம் வேண்டுமானாலும் குடிக்க ஏற்றது. சூப்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து சூப்புகளுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பவை. ஆனால் அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் சூப் என்றால் அது நாட்டுக்கோழி சூப் தான். அதிலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கோழி சூப் குடிப்பது நல்லது என்றே கூற வேண்டும். இதற்கு இதில் சேர்க்கப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலா பொருட்கள் தான்.

சொல்லப்போனால் சளி பிடித்திருக்கும் போது, ஒரு கப் நாட்டுக்கோழி சூப் குடித்தால், சளியில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலுக்கு தெம்பாகவும் இருக்கும். உங்களுக்கு நாட்டுக்கோழி சூப் பிடிக்குமா? ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே நாட்டுக்கோழி சூப்பின் மிகவும் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று
தேவையான பொருட்கள்:
* நாட்டுக்கோழி - 1/4 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1/4 கப்
* தக்காளி - 1 (சிறியது, நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
* மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 3
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
* அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.
* குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!



Click it and Unblock the Notifications