Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க..
Indonesian Style Fried Rice Recipe In Tamil: உங்கள் வீட்டில் மீந்து போன சாதம் உள்ளதா? அந்த சாதத்தைக் கொண்டு வித்தியாசமான ரெசிபி ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் இருக்கும் விவசாய மக்கள் மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய ப்ரைடு ரைஸ் ரெசிபியை செய்து சாப்பிடுங்கள். இதை நாசி கோரெங் காம்பங் என்று அழைப்பர்.

இந்த ப்ரைடு ரைஸின் ஸ்பெஷலே நெத்திலிக் கருவாடு சேர்த்து ப்ரைடு ரைஸ் செய்வது தான். ஒருவேளை உங்களுக்கு கருவாடு பிடிக்காதென்றால், அதற்கு பதிலாக இறால் கொண்டு செய்யலாம். இல்லாவிட்டால் முட்டை மட்டும் சேர்த்தாலும் போதும். ஆனால் பாரம்பரிய நாசி கோரெங் காம்பங் ரெசிபியை செய்து சுவைக்க நினைத்தால், கருவாட்டை சேர்க்க வேண்டும். இந்த ப்ரைடு ரைஸ் நிச்சயம் கருவாடு பிரியர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். உங்கள் வீட்டில் நெத்திலி கருவாடு இருந்தால், நிச்சயம் ஒருமுறை ட்ரை செய்யுங்கள்.
இந்த நாசி கோரெங் காம்பங் ரெசிபி குறித்து ரேகா என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த நாசி கோரெங் காம்பங் என்னும் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* பழுத்த மிளகாய் - 2
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயத் தாள் - சிறிது
ப்ரைடு ரைஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெத்திலிக் கருவாடு - சிறிது
* முட்டை - 3
* உப்பு - சிறிது
* மிளகுத் தூள் - சிறிது
* மீந்து போன சாதம் - 1 கப்
* வெள்ளை மிளகுத் தூள்/சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயத் தாள் - சிறிது
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, பழுத்த மிளகாய், 1/4
டீஸ்பூன் உப்பு சேர்த்து ஒருமுறை லேசாக அரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது வெங்காயத் தாளை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எணணெய் ஊற்றி சூடானதும், நன்கு சுத்தம் செய்த நெத்திலிக் கருவாட்டை
சேர்த்து நன்கு மொறுமொறுவென்று ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் லேசாக அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் வாணலியில் அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு, 3 முட்டைகளை
உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி
பொடிமாஸ் போன்று செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மீந்து போன சாதத்தை சேர்த்து, நன்கு ஒருசேர கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் ப்ரை செய்த கருவாடு மற்றும் வெள்ளை மிளகுத் தூள்
அல்லது சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து, அத்துடன் சிறிது வெங்காயத் தாள்
மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான
இந்தோனேசியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் தயார்.



Click it and Unblock the Notifications