Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
நாகபஞ்சமி ஸ்பெஷல் வரகரிசி பாயாசம் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்!
Varagarisi Payasam Recipe In Tamil: ஆடி மாதம் தமிழ்நாட்டில் கடவுள் வழிபாட்டிற்கு உரிய சிறந்த மாதமாக கருதப்படுகிறது. அதில் பல விசேஷ நாட்கள் கோலாகலமாக கோவில்கள் மற்றும் வீட்டில் என கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் நாளை(28-07-2025) செவ்வாய் கிழமை நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி கொண்டப்படுகிறது. ஆனால் இந்த நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாகர்களிடம் அடிமையாக இருந்த கருடர் அவர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாளாக கொண்டப்படுகிறது. வாழ்வில் தொடர்ச்சியாக முன்னேற்ற தடைகளை சந்திப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வணங்கினால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். சரி வாங்க இந்த நாளில் நெய்வேத்தியமாக எப்படி வரகு அரிசி பாயசம் செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:
- வரகு - ¼ கப்
- ஜவ்வரிசி - ½ கப்
- பால் - 2 கப்
- தேங்காய் - 1 மூடி
- முந்திரி - 4
- ஏலக்காய் - 2
- வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1½ கப்
- பாதாம் - 5
- பிஸ்தா - 5
- உப்பு - 1 சிட்டிகை
வறுக்க:
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உலர் திராட்சை - 12
- முந்திரி - 6
செய்முறை:
- முதலில் வரகு அரிசியை சுத்தமாக தண்ணீரில் அலசி குறைந்தது 4 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
- பின் வரகு மற்றும் ஜவ்வரிசி சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- பாலை காய்ச்சி நன்றாக சூடு ஆறும் வரை ஆற விடவும்.
- தேங்காயை துருவி இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தனியே எடுத்து கொள்ளவும்.
- ஏலக்காய், முந்திரி மற்றும் மீதம் இருக்கும் தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
- சிறு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து காயவிடவும்.
- பின் அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- அதே நெய்யில் உலர்திராட்சையை சேர்த்து பலூன் போல் பெரிதானதும் எடுத்து ஆறவிடவும்.
- பின் பாதம் மற்றும் பிஸ்தாவை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
-அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கரைந்ததும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பின் அதை மண் மற்றும் தூசி இல்லாமல் வடித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதை வேக வைத்து ஆற வைத்த வரகரிசி மற்றும் ஜவ்வரிசியுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் பால், காய்ச்சி ஆற வைத்த பால், தனியாக எடுத்து வைத்த தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- கடைசியாக நெயில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான வரகு அரிசி பாயசம் ரெடி!
- அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதன் மீது நறுக்கிய பாதம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து பரிமாறலாம்.
- பாதம் மற்றும் பிஸ்தா இல்லை என்றால் தவிர்த்து விடுங்கள்.



Click it and Unblock the Notifications