Latest Updates
-
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
மணமணக்கும்.. மட்டன் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
Mutton Milagu Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி மட்டன் வாங்குவீர்களா? மட்டன் வாங்கினால் எப்போதும் ஒரே குழம்பு, கிரேவி, வறுவல், சுக்கா என எப்போதும் ஒரே மாதிரி ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மட்டன் மிளகு வறுவலை செய்யுங்கள். இந்த மட்டன் மிளகு வறுவல் சூடான சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த மட்டன் மிளகு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 7 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* சின்ன வெங்காயம் - 5
* தேங்காய் - 2 சில்லு
* முந்திரி - 10
* சின்ன தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 1 இதழ்
* காஷ்மீரி வரமிளகாய் - 1
வறுவல் தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 25
* சீரகம் - 2 சிட்டிகை
* சோம்பு - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* மட்டன் - 3/4 கிலோ
* அரைத்த விழுது
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி,
சின்ன வெங்காயம், தேங்காய், முந்திரி, சின்ன தக்காளியை சேர்க்க
வேண்டும்.
* பின்பு அதில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசிப்பூ மற்றும் காஷ்மீரி வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, கொத்தமல்லியை சிறிது
தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் மட்டனை கழுவி சேர்த்து, 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி
பிரட்டி, குக்கரை மூடி வைத்து 5 விசில் விட்டு, பின் குறைவான தீயில்
வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான மட்டன் மிளகு வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications