Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க!
Chef Madhampatty Rangaraj's Mutton Kulambu Recipe In Tamil: இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கி செய்யப் போகிறீர்களா? எப்போதும் மட்டனை ஒரே சுவையில் தான் குழம்பு வைத்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் சற்று வித்தியாசமான சுவையில் மட்டன் குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மிகவும் பிரபலமான செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மட்டன் குழம்பு செய்யுங்கள்.
இந்த மட்டன் குழம்பு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த குழம்பு அவரது அம்மா ஸ்டைல் மட்டன் குழம்பு என்றும், இந்த குழம்பு இவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும், இந்த குழம்பானது இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, பூரி, பரோட்டா என்று அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

உங்களுக்கு செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - சிறிது
* பூண்டு - 12 பல்
* இஞ்சி - 2 துண்டு
* கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 15
* மிளகு - 25 கிராம்
* சீரகம் - 30 கிராம்
* மல்லி - 25 கிராம்
* பட்டை - 2
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 5
* சின்ன வெங்காயம் - 250 கிராம்
* மட்டன் - 1/2 கிலோ
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் மட்டனை கழுவி சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு
மற்றும் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 2 துண்டு பட்டை, 4 கிராம்பு, 5 ஏலக்காய் சேர்த்து
வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகு, சீரகம், மல்லி சேர்த்து வறுக்க
வேண்டும்.
* அடுத்து வரமிளகாய் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வறுத்து,
ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 சிட்டிகை மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு,
சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலாவை சேர்த்து, அத்துடன் வதக்கிய
வெங்காயத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு, 2 வரமிளகாய், 2 கொத்து
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் வேக
வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, குறைவான தீயில் வைத்து ஒருமுறை கிளறி, மூடி வைத்து, பச்சை
வாசனை நீங்கி நன்கு மட்டனும் மசாலாவும் ஒன்று சேர 10 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications
